தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நடுரோட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார் - vellore district

வேலூர்: பழுது பார்க்க வந்த காரை மெக்கானிக் ஓட்டிச் சென்ற போது காரின் முன்பக்கத்தில் புகை வந்து திடீரென தீப்பற்றி எரிந்தது.

தீப்பிடித்து எரிந்த கார்
தீப்பிடித்து எரிந்த கார்

By

Published : Oct 20, 2020, 6:24 AM IST

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த விண்ணமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ். தன்னுடைய காரை பழுது நீக்குவதற்காக தனது நண்பர் பாலகிருஷ்ணனிடம் வேலூருக்கு கொடுத்து அனுப்பியுள்ளார்.

வேலூர் மாவட்டம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மெக்கானிக் கடையில் பாலகிருஷ்ணன் காரை விட்டுள்ளார். காரை பரிசோதிப்பதற்காக மெக்கானிக் காரை ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது வேலூர் புதிய மீன் மார்கெட் அருகே மக்கான் சிக்னலில் கார் சென்றுகொண்டிருந்தபோது திடீரென காரின் முன் பக்கத்தில் புகை வந்துள்ளது.

தீப்பிடித்து எரிந்த கார்

உடனே காரை நிறுத்தி காரின் முன் பகுதியை திறந்து பார்த்தபோது, திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியுள்ளது. உடனடியாக வேலூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்க முயன்றனர். இருப்பினும், அதற்குள் கார் முழுவதும் தீயில் எரிந்து நாசமானது.

இதையும் படிங்க: ரூ.6 கோடி மதிப்பிலான இடத்தை விற்று மோசடி: காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்!

ABOUT THE AUTHOR

...view details