வேலூர்: வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த சின்னராஜாகுப்பம் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான பிரபு என்பவரின் 16 வயது மகள் ரஞ்சனா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) இவர் அரசு நிதி உதவி பெறும் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து பொதுத் தேர்வில் 410 மதிப்பெண்களை எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார். ஆனால் கூலி தொழிலாளியான பிரபு மது பழக்கத்திற்கு ஆளாகி தினம் தோறும் மது அருந்திவிட்டு தனது மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மது பழக்கத்தினால் மாணவி ரஞ்சனாவின் தந்தை தினந்தோறும் மது அருந்திவிட்டு விட்டிற்கு வந்தபிறகு அவரது தாயுடன் தகராறில் ஈடுபடுவதால் மனமுடைந்த பள்ளி மாணவி, "என் மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை என் ஆசை என் அப்பா குடிப்பதை நிறுத்தவும், என் குடும்பம் மகிழ்ச்சியாக இருப்பதை எப்பொழுது காண்பேனோ அப்போதுதான் என் ஆத்மா சாந்தி அடையும்" என கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதையும் படிங்க:ஒடிசாவில் இருந்து சென்னை வந்த சிறப்பு ரயில்.. 133 பயணிகள் வருகை; 8 பேருக்கு சிகிச்சை என அமைச்சர் தகவல்!