தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காவல் சீருடையில் கொள்ளையடித்த 9 பேர் கைது; ரூ.32 லட்சம் பறிமுதல்

தமிழ்நாடு காவல் சீருடையை அணிந்து தொழிலதிபரிடம் கொள்ளையடித்த 9 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து ரூ.32 லட்சம் பணம், 2 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

பறிமுதல் செய்யப்பட்ட பணம், காவல் சீருடைகள்
பறிமுதல் செய்யப்பட்ட பணம், காவல் சீருடைகள்

By

Published : Jul 17, 2021, 6:41 AM IST

வேலூர்: கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபர் கே.வி.அசோகன். இவர் தமிழ்நாடு, கர்நாடகா, துபாய், கத்தார் என வணிக ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகிறார்.

இவரது நண்பர் பைனான்சியர் முகமது. முகமதுவிடம், கோயம்புத்தூரைச் சேர்ந்த ஷேக் அப்துல்லா என்ற நபர், சாய் கிருஷ்ணா என்ற பெயரில் அறிமுகமாகியுள்ளார்.

அப்துல்லாவிடம் ரூ. 2 ஆயிரம் வடிவில் நிறைய கள்ளநோட்டுகள் இருப்பதாகவும், அதனை ரூ.1 கோடி மதிப்புக்கு ரூ.500 நோட்டுகளாக மாற்றிக் கொடுத்தால் இரண்டு விழுக்காடு கமிஷன் தருவதாகவும் கூறியுள்ளார்.

இதனை நம்பிய முகமது, அசோகனிடம் ரூ.90 லட்சத்துக்கு ரூ. 500 நோட்டுகளை தயார் நிலையில் வைக்கும்படி அறிவுறுத்தியுள்ளார்.

காவல் உடையில் கொள்ளை

பறிமுதல் செய்யப்பட்ட பணம், காவல் சீருடைகள்

அதன்படி சித்தூர் - வேலூர் சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில், ரூ. 45 லட்சத்துடன் இருவரும் காத்திருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த தமிழ்நாடு காவல் உடை அணிந்த கும்பல், அவர்களைத் தாக்கிவிட்டு பணத்தை திருடிச் சென்றது.

9 பேர் கைது, ரூ. 32 லட்சம் பணம் பறிமுதல்

இது குறித்த புகாரின் பேரில் சித்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களைத் தேடி வந்தனர். இதனையடுத்து கடந்த ஜூலை 14ஆம் தேதி கோபாலபுரத்தில் நடத்தப்பட்ட வாகன சோதனையில், வழக்கில் தொடர்புடைய 9 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

மேலும் அவர்களிடமிருந்து ரூ.32 லட்சம் பணம், 3 கார்கள், 2 துப்பாக்கிகள், தமிழ்நாடு காவல் சீருடைகள் உள்ளிட்டவை காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டன.

இதையும் படிங்க:போலி நகைகளை வைத்து தங்க நகைககள் திருடிய பெண்கள் கைது

ABOUT THE AUTHOR

...view details