தமிழ்நாடு

tamil nadu

இரு சக்கர வாகனத்தில் கள்ளச்சாராயம் கடத்தியவர்கள் கைது!

By

Published : May 12, 2020, 5:09 PM IST

வேலூர்: இரு சக்கர வாகனத்தில் கடத்திவரப்பட்ட 315 லிட்டர் கள்ளச்சாராயத்தை காவல் துறையினர் பறிமுதல்செய்து 8 பேரை கைது கைதுசெய்துள்ளனர்.

8 arrested illicit liquor at vellore
இரு சக்கர வாகனத்தில் கள்ளச்சாராயம் கடத்தியவர்கள் கைது!

கரோனா வைரஸ் பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை சாதகமாகப் பயன்படுத்தி தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சி வருவதாக அந்தந்த மாவட்ட காவல் துறையினருக்கு பொதுமக்கள் புகார்கள் அளிக்கின்றனர். அதன்படி காவல் துறையினரும் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களை கண்டுபிடித்து கைது செய்து வருகின்றனர்.

அந்த வகையில், வேலூர் மாவட்டம் பாகாயம், அரியூர் ஆகிய காவல் நிலைய எல்லைகளுக்குட்பட்ட பகுதிகளில் கள்ளச்சாராயம் கடத்தப்படுவதாக மதுவிலக்கு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், மதுவிலக்கு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் தனிப்படை காவல் துறையினர் நடத்திய வாகன சோதனையில், கள்ளச்சாராயம் கடத்திவந்தது தெரியவந்தது.

இதையடுத்து, காவல் துறையினர் வாகனத்துடன் கள்ளச்சாராயத்தைப் பறிமுதல்செய்து வழக்குப்பதிந்து எட்டு பேரையும் கைதுசெய்தனர். இது குறித்து மாவட்ட துணை கண்காணிப்பாளர் எஸ்.பி பிரவேஷ்குமார் கூறுகையில், "ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் மாவட்டம் முழுவதும் மதுபான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

இதனால், மதுபானம், கள்ளச்சாராயம் உள்ளிட்டவை கடத்திவருவதைத் தடுக்க ஐந்து இடங்களில் சோதனைச்சாவடி நிறுவப்பட்டுள்ளன. 15 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இரு சக்கர வாகனத்தில் கள்ளச்சாராயம் கடத்தி கைது செய்யப்பட்டவர்கள்

தற்போதுவரை இருசக்கர வாகனத்தில் கள்ளச்சாராயம் கடத்திவந்த எட்டு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அதேபோல், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 3 இருசக்கர வாகனங்களும், 315 லிட்டர் சாராயமும் பறிமுதல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க :ஒரு கையில் கபசுர குடிநீர், மறுகையில் மதுவா ? - உயர் நீதிமன்றம்

ABOUT THE AUTHOR

...view details