தமிழ்நாடு முழுவதும் கரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமெடுத்துவரும் சூழலில் நேற்று (மே. 10) மட்டும் தமிழ்நாட்டில் 28 ஆயிரத்து 978 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
வேலூரில் இன்று ஒரே நாளில் 734 பேருக்கு கரோனா உறுதி! - கரோனா தொற்று
வேலூர்: இன்று ஓரே நாளில் 734 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
வேலூர்: இன்று ஓரே நாளில் கரோனா பாதிப்பு வேலூரில் 700ஐ தாண்டியது.
இந்நிலையில், வேலூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை நேற்று (மே 10) 296 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும், இன்று (மே. 11) மட்டும் 734 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட நிர்வாகம் சார்பில் தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டுவந்தாலும் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வருவது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.