வேலூர் மாவட்டம் வாணியம்பாடி புதுடெல்லி பகுதியில் உள்ள ஓர் வீட்டில் கள்ளதனமாக ரேசன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக வாணியம்பாடி வட்டாட்சியருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் புதுடெல்லி பகுதிக்கு விரைந்த வட்டாட்சியர் தலைமையிலான அலுவலர்கள், அனு என்பவரின் வீட்டின் ஓர் அறையில் 7 டன் ரேசன் அரிசி மூட்டைகpளல் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.
உடனடியாக தனியார் வாகனம் மூலம் அப்பகுதி மக்கள் உதவியுடன் 7 டன் அரிசி மூட்டைகளை வாணியம்பாடி நுகர்வோர் வாணிபக் கிடங்கிற்கு அனுப்பி வைத்தனர்.
கள்ளத்தனமாக வீட்டில் பதுக்கி வைத்திருந்த 7 டன் ரேசன் அரிசி மேலும் அனு என்பவர் பல ஆண்டுகளாக இப்பகுதியில் வசித்து வருவதாகவும், வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள சில அலுவலர்கள் உதவியுடன் வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இயங்கி வரும் 26 ரேசன் கடைகளுக்கு வரும் அரிசிகளை மலிவு விலைக்கு வாங்கி அதை அதிக லாபத்திற்கு வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்வதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் வாணியம்பாடியிலிருந்து வெளிமாநிலங்களுக்கு அதிக அளவிலான ரேசன் அரிசி கடத்தல் நடைபெறுவதாகவும் அதை அலுவலர்கள் சிலர் கண்டுக்கொள்ளாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: திருடிய வீட்டில் சமைத்து சாப்பிட்ட திருடர்கள்!