வேலூர் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. அந்த வகையில், வேலூர் தொரப்பாடியிலுள்ள மத்தியச் சிறையில் பணியாற்றும் இரண்டு சிறை வார்டன்கள், கரும்புச்சாறு கடை வைத்துள்ள நபர், சேண்பாக்கம் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது பேர் என வேலூர் மாவட்டத்தில் நேற்று ஒரு நாளில் மட்டும் 63 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மத்தியச் சிறை வார்டன்கள் இருவருக்கு கரோனா; ஒரே நாளில் 63 பேர் பாதிப்பு! - கரோனா தொற்று
வேலூர்: மத்தியச் சிறை வார்டன்கள் உள்பட 63 பேருக்கு நேற்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
63 COVID19 POSITIVE CASE JAIL DIG OFFICE CLOSED
இதுவரை வேலூர் மாவட்டத்தில் 396 பேர் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 78 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ள நிலையில், நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.