கரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனை சாதகமாக பயன்படுத்தி தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் பலர் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வருவதாக அந்தந்த மாவட்ட காவல்துறையினருக்கு பொதுமக்கள் புகார்கள் அளித்து வருகின்றனர்.
அதன்படி காவல்துறையினரும் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களை கைது செய்தும் வருகின்றனர். அதைத்தொடர்ந்து
500 லிட்டர் கள்ளச்சாராயம், 3000 லிட்டர் ஊறல் அழிப்பு வேலூர் மாவட்டம் ஒடுகத்தூரை அடுத்த கத்தியப்பட்டு மலையடிவாரத்தில் சிலர் கள்ளச்சாராயம் காய்ச்சிவருவதாக காவல்துறையினருக்கு தகவல்கிடைத்தது. அங்குவிரைந்த தனிப்பிரிவு காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அந்த சோதனையில், மலைப் பகுதியில் 3000 லிட்டர் சாராய ஊறல், பேரல்களில் 500 லிட்டர் கள்ளச்சாராயம் உள்ளிட்டவைகள் சிக்கின. அவற்றை அழித்த காவல்துறையினர், கள்ளச்சாராயம் காய்ச்சியவர்களை தீவிரமாக தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க:விருதுநகரில் கள்ளச்சாராயம் காய்ச்சிய ஒருவர் கைது