தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

world aids day: வேலூரில் கொட்டும் மழையில் மினி மாராத்தான்! - aids

நறுவீ மருத்துவமனையின் சார்பில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு 5 கிலோ மீட்டருக்கு மாராத்தான் ஓட்டம் நடைபெற்றது

Etv Bharat
Etv Bharat

By

Published : Dec 1, 2022, 2:09 PM IST

வேலூர்: நறுவீ மருத்துவமனையின் சார்பில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு எய்ட்ஸ் விழிப்புணர்வு மாராத்தான் ஓட்டம் நடைபெற்றது. இதில் மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் அனைவரும் கலந்துகொண்டு நறுவீ மருத்துவமனை முதல் சத்துவாச்சாரி வள்ளலார் சாலை வரை சென்று மீண்டும் நறுவீ மருத்துவமனை வரை 5 கி.மீ திரும்பி வந்தனர்.

உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு 5 கி.மீ., மினி மாரத்தான்

இந்த மினி மாராத்தானை வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் கொடியசைத்து துவங்கி வைத்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா, நறுவீ மருத்துவமனையின் இயக்குநர் ஜி.வி சம்பத் உட்பட 300க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டு கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் விழிப்புணர்வு மாராத்தானில் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: வேலூர் சிறையில் கைதிகளுடன் பேச இன்டர்காம் வசதி!

ABOUT THE AUTHOR

...view details