வேலூர்: சாய்நாதபுரத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவனும், 14 வயது சிறுமியும் ஒருவரை ஒருவர் காதலித்து வீட்டை விட்டு ஓடிய விவகாரத்தில் சிறுவனை, சிறுமியின் தந்தை உள்ளிட்டோர் கடுமையாக தாக்கி உள்ளனர்.
இதனையடுத்து, சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சிறுவனின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் சிறுமியின் தந்தையை காவல்துறையினர் கைது செய்தனர்.
கடந்த அக்டோபர் 27ஆம் தேதி இச்சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்யும் செய்ய வலியுறுத்தி வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் சிறுவனின் தந்தை புகார் அளித்திருந்தார்.
ஆனால் புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி, சிறுவனின் உறவினர்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர்.