குவாட்டடுக்காக பைக் திருட்டு வேலூர்:தெற்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அடிக்கடி பைக்குகள் காணாமல் போன நிலையில் வேலூர் தெற்கு காவல் நிலைய போலீசார் திருட்டு தொடர்பான சிசிடிவி காட்சிகளை வைத்தும், தொடர் வாகன சோதனைகளை நடத்தியும் வந்தனர்.
இந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் பைக் திருடும் நபரை அடையாளம் தெரிந்துகொண்ட போலீசார், ஜனவரி 21ஆம் தேதி சந்தேகத்திற்கு இடமாக நபரை பிடித்து விசாரணையை மேற்கொண்டனர்.
இந்த கிடுக்குபிடி விசாரணையில், திருட்டில் ஈடுபட்டவர் ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி ஆணைமல்லூரை சேர்ந்த தனசேகர் (42) என்பதும் அவர் மீது ஏற்கனவே பல திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. இவர், குவாட்டர்க்காகவும், அன்றாட செலவிற்காகவும் பல இடங்களில் இருந்து பைக்குகளை திருடி அடமானம் வைத்து வந்தது தெரியவந்தது.
அந்த வகையில் இவர் 50-க்கும் மேற்பட்ட பைக்குகளை திருடி அதனை மதுவுக்காக அடமானம் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த பைக்குகளை பறிமுதல் செய்த போலீசார் பைக் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தனசேகர் மீது ஐந்து பிரிவுகளில் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை நீதிமன்றம் முன் நிறுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: ஓடும் ரயிலில் செல்போன் பறிப்பு.. வடமாநில இளைஞர் உயிரிழப்பு..