வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் சுற்றுவட்டார மலைக் கிராமங்களில் ஊரடங்கு உத்தரவை மீறி எரி சாராயம் காய்ச்சுவதாகவும் மேலும் அப்பகுதியை சுற்றி நீண்ட நாட்களாக எரிசாராயம் விற்பனை செய்து வருவதாகவும் காவல் துறையினருக்கு தொடர் புகார்கள் வந்தன.
இதனையடுத்து காவல் துறையினர் வேலூர் மாவட்ட எஸ்.பி பிரவேஷ்குமார், டி.எஸ்.பி சுரேஷ் தலைமையில் சிறப்பு தனிப்பிரிவினர் ஒடுகத்தூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ஒடுகத்தூர் அடுத்த முல்வாடி மலை கிராமத்தில் 3 இடங்களில் மண்ணில் புதைத்து வைக்கப்பட்டு இருந்த எரிசாராய ஊறல் இருந்ததை கண்டு பிடித்தனர். பின்னர் பதுக்கி வைக்கப்பட்ட 4 ஆயிரம் லிட்டர் எரிசாரய ஊறல்களை பாதுகாப்பான முறையில் அழித்தனர்.
அதன்பின் மலைப் பகுதியில் சாராயம் காய்ச்சுபவர்களையும் எரி சாராயம் விற்பனை செய்துவரும் கும்பலையும் காவல்து றையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: வாணியம்பாடியில் 4,725 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்