வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை அடுத்த செட்டிதாங்கல் பகுதியைச் சேர்ந்த இளம்பருதி- ஷோபனா தம்பதி தங்களது ஒன்பது வயது மகன் தனுஷூடன் இருசக்கர வாகனத்தில் காஞ்சிபுரம் அத்திவரதர் கோயிலுக்குச் சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காவேரிப்பாக்கம் அருகே சுமைதாங்கி என்ற இடத்தில் சாலையைக் கடக்க முயன்ற காளிமுத்து என்பவர் மீது இவர்கள் பயணித்த இருசக்கர வாகனம் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் காளிமுத்து படுகாயமடைந்தார்.