வேலூர்:பள்ளிகொண்டா போலீசார் நேற்றிரவு முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கோவிந்தம்பாடியில் தேசிய நெடுஞ்சாலையொட்டி ஒரு காரில் இருந்து லாரிக்கு சிறிய பண்டல்களை சிலர் ஏற்றிக் கொண்டிருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் பண்டலை பிரித்து பார்த்தபோது அதில் பணம் இருப்பது தெரிய வந்தது.
உரிய ஆவணங்கள் இன்றி சிக்கிய ரூ.10 கோடி - 4 பேர் கைது - தொடர் விசாரணை
வேலூரில் உரிய ஆவணங்கள் இன்றி பண்டல் பண்டலாக ரூ.10 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. அதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
அதற்கான ஆவண இல்லாததால் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். அதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். முதற்கட்ட விசாரணையில் பிடிபட்ட 4 பேரும் சென்னை பிராட்வே பகுதியை சேர்ந்த நிசார் அஹமத், மதுரையை சேர்ந்த வசீம் அக்ரம், கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த சர்புதீன், நாசர் என்பதும் சென்னையில் இருந்து கேரளாவிற்கு பணத்தை கடத்த இருந்தததும் தெரியவந்தது. அதோடு பறிமுதல் செய்யப்பட்ட பணத்தின் மதிப்பு ரூ. 10 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின் வேலூர் வருமான வரித்துறையினருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். மேலும் அவர்களிடம் அமலாக்க துறை சாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: கம்பியில் சிக்கிய உயிரிழந்த மான்களை வெட்டி விற்க முயன்றவர் கைது