தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 26, 2020, 4:59 PM IST

ETV Bharat / state

போலி இ-பாஸூடன் பயணித்த 37 பிகார்வாசிகளை தடுத்து நிறுத்திய காவல் துறையினர்!

வேலூர் : போலி இ-பாஸ் கொண்டு சென்னையில் இருந்து வேலூர் நோக்கி பேருந்தில் சென்ற பிகாரைச் சேர்ந்த 37 பேரை காவல் துறையினர் மீண்டும் சென்னைக்கே அனுப்பி வைத்தனர்.

Fake e-pass 37 immigrants traveled denied by police at Vellore
Fake e-pass 37 immigrants traveled denied by police at Vellore

வேலூர் மாவட்ட எல்லையான பிள்ளையார்குப்பம் தேசிய நெடுச்சாலை சோதனைச் சாவடியில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சென்னையில் இருந்து வேலூர் நோக்கி வந்த கேரள பதிவு எண் கொண்ட பேருந்தை நிறுத்தி சோதனை செய்ததில் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் 37 பேர் அதில் பயணித்து வந்தது தெரிய வந்தது.

தொடர்ந்து அவர்களைக் காவல் துறையினர் கீழே இறக்கி விசாரித்ததில், 37 பேரும் பிகாரைச் சேர்ந்த குடிபெயர் தொழிலாளர்கள் என்றும், சென்னையில் இருந்து அனைவரும் கேரளா செல்வதும் தெரிய வந்தது.

மேலும் அவர்களிடம் இருந்த இ-பாஸை காவல் துறையினர் சோதனை செய்ததில், அது காலாவதியான, போலி இ-பாஸ் எனவும் தெரிய வந்தது. இதனையடுத்து அந்த பேருந்து மீண்டும் சென்னைக்கே திரும்பி அனுப்பப்பட்டது.

இதையும் படிங்க :பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தண்டோரா மூலம் பாதுகாப்பு நடவடிக்கைகள் தெரிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details