தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

3,400 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் அழிப்பு - மதுவிலக்குப்பிரிவு காவல் துறை அதிரடி! - Liquor Section Police Department

வேலூர்: தமிழ்நாடு - ஆந்திர எல்லை வனப்பகுதியில் 3400 லிட்டர் கள்ளச்சாராய ஊறலை மதுவிலக்குப் பிரிவு காவல் துறையினர் கண்டறிந்து அழித்தனர்.

Police to destroy spirit

By

Published : Nov 3, 2019, 6:24 PM IST

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழ்நாடு - ஆந்திர எல்லைப் பகுதியில் உள்ளது கோரிபள்ளம் வனப்பகுதி. இப்பகுதியில், அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக மாவட்ட கண்காணிப்பாளர் பிரவேஷ் குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில், மது விலக்கு அமலாக்கப் பிரிவு மாவட்ட கண்காணிப்பாளர் ராஜேந்திரன் தலைமையிலான எட்டு பேர் கொண்ட தனிப்படை காவல் துறையினர் வனப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அங்குள்ள மலைப்பகுதியில் இருந்த கள்ளச்சாராய கும்பல் காவல் துறையினர் வருவதைக் கண்டு தப்பியோடினர். அதையடுத்து, கள்ளச் சாராயம் காய்ச்ச தயார் நிலையில் வைத்திருந்த 3400 லிட்டர் சாராய ஊறலைக் கண்டறிந்து காவல் துறையினர் அழித்தனர். மேலும், அங்கிருந்து தப்பியோடிய கள்ளச்சாராயம் காய்ச்சும் கும்பலை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

கள்ளச் சாராய ஊறலை அழிக்கும் காவல் துறையினர்

இதையும் படிங்க: 'ரூ.10லட்சம் மதிப்புள்ள பாண்டிச்சேரி மதுபாட்டில்கள் பறிமுதல்'

ABOUT THE AUTHOR

...view details