வேலூர்: மூன்று அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி மாற்றுத்திறனாளிகள், வேலூர் அண்ணா சாலையில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் முன்பு நேற்று (பிப். 23) காலவரையற்ற குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூரில் 3 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி மாற்றுத்திறனாளிகள் போராட்டம்
மூன்று அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் வேலூரில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காலவரையற்ற குடியேறும் போராட்டத்தின் முக்கியக் கோரிக்கையாக கரோனா நிவாரண நிதியாக மூன்றாயிரம் ரூபாய் தரக் கோரியும், தெலங்கானா, புதுச்சேரிபோல் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்றாயிரம் அல்லது ஐந்தாயிரமாக உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும், வேலைவாய்ப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான 2016 சட்டத்தை அமல்படுத்தி வேலைவாய்ப்பினை வழங்கக் கோரியும் 300-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க:சத்துணவு ஊழியர்கள் மறியல் போராட்டம்: 300க்கும் மேற்பட்ட பெண்கள் கைது !