நாடு முழுவதும் கரோனாவின் இரண்டாவது அலை காரணமாக தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் நாளை (ஏப்ரல் 10) முதல் அமலுக்கு வர உள்ளது. இதனையொட்டி, மாவட்டம் முழுவதும் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் வேலூர் மாவட்டதில் உள்ள கூட்டுறவு சங்கப் பணியாளர்கள், ரேசன் கடைப் பணியாளர்கள் என கூட்டுறவு துறை சார்ந்த 300 பணியாளர்களுக்கு வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள காயிதே மில்லத் கூட்டரங்கில், இலவசமாக கோவாக்சின் தடுப்பூசி இன்று (ஏப்ரல். 09) போடப்பட்டது. இந்நிகழ்வை வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தொடக்கி வைத்தார்.
கரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட 300 கூட்டுறவுத் துறை பணியாளர்கள் - கரோனாவின் இரண்டாவது அலை
வேலூர்: கூட்டுறவு சங்கப் பணியாளர்கள், ரேசன் கடைப் பணியாளர்கள் என கூட்டுறவு துறை சார்ந்த 300 பணியாளர்கள் ஒன்றாக தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
கரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட 300 கூட்டுறவு துறை பணியாளர்கள்
இதையும் படிங்க:ஜெயலலிதா நினைவிடம் மீண்டும் திறப்பு