வேலூர் :சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் சிறை கைதிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் 15 நாட்கள் பரோல் அடிப்படையில் அவர்களது வீட்டிற்கு செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது. இதன் அடிப்படையில் வீட்டு நிகழ்வு, பண்டிகை கொண்டாட்டம் என்கிற காரணங்களுக்காக, வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் 30 கைதிகள் 15 நாட்கள் பரோல் கேட்டு இன்று (ஜன. 11) விண்ணப்பித்துள்ளனர்.
ஆயுள் தண்டனைக் கைதிகள் 30 பேர் பரோல் கேட்டு விண்ணப்பம்! - வேலூர் மாவட்ட செய்திகள்
வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் 30 கைதிகள் பரோல் கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.
30 lifers apply for parole
இவர்களது விண்ணப்பங்கள் ஓரிரு நாட்களில் அங்கீகரிக்கப்பட்டு, பரோல் பெற தகுதி உள்ளவர்களுக்கு பரோல் வழங்கப்படும். கரோனா தொற்று காரணமாக பரோல் முடிந்து சிறைக்கு திரும்பும்போது கரோனா பரிசோதனை மேற்கொண்டு தொற்று இல்லை என்று சான்றிதழ் காண்பிக்க வேண்டும் என கைதிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:அமித் ஷா வருகையின்போது பேனர் வைத்தது தொடர்பான வழக்கு தள்ளுபடி