வேலூர்:வேலூர் மாவட்டத்தில் பள்ளி பொங்கல் விழா கொண்டாட்டத்தின் போது, திடீரென மயக்கமடைந்து உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் இன்று (ஜன.11) சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பொங்கல் கொண்டாட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், அப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்த மாணவி விளையாடிக் கொண்டிருந்த நிலையில் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
உடனடியாக ஆசிரியர்கள் அம்மாணவியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதனிடையே அம்மாணவியின் பெற்றோருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். மாணவியைப் பரிசோதித்த மருத்துவர்கள் மாணவி மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து விரிஞ்சிபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் இந்த மாணவிக்கு வலிப்பு நோய் உள்ளதும் அதற்கான மருத்துவத்தை அவர் தொடர்ந்து பார்த்து வருவதும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் சக மாணவர்கள் மற்றும் அப்பள்ளி ஆசிரியர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:திருவண்ணாமலை பள்ளியில் களைக்கட்டிய சமத்துவ பொங்கல்; ஆட்டம் பாட்டத்துடன் உற்சாக கொண்டாட்டம்!