தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரயில் நிலையத்தில் 25 கிலோ கஞ்சா பறிமுதல்! - seized

வேலூர்: காட்பாடி ரயில் நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த இரண்டு பைகளில் இருந்த சுமார் 12 லட்சம் மதிப்புள்ள 25 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காட்பாடி ரயில் நிலையம்

By

Published : May 30, 2019, 3:01 PM IST

வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலையத்தில் நேற்றிரவு காட்பாடி ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளர் முத்துப்பாண்டி, எஸ்ஐ ஸ்ரீரங்கநாதன் தலைமையிலான காவல் துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ரயில் நிலையத்தின் ஐந்தாவது பிளாட்பாரத்தில் காட்பாடியிலிருந்து திருப்பதி செல்லும் மார்க்கத்தில் பயணிகள் அமரும் இருக்கையின் கீழே இரண்டு பைகள் கேட்பாரற்றுக் கிடந்தன. இதனை சோதனை செய்தபோது அவற்றில் 25 கிலோ அளவுள்ள கஞ்சா இருந்தது தெரிய வந்தது. அதன் மதிப்பு சுமார் 12 லட்சத்துக்குமேலிருக்கும் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். அதன் பின்னர், கைப்பற்றப்பட்ட கஞ்சாவை தமிழ்நாடு போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும், இது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

25 கிலோ கஞ்சா பறிமுதல்

ABOUT THE AUTHOR

...view details