இடி தாக்கி 22 ஆடுகள் பரிதாப உயிரிழப்பு - இடி தாக்கி 22 ஆடுகள் பரிதாப உயிரிழப்பு
வேலூர்: பெண்ணாத்தூர் அருகே இடி தாக்கி 22 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் பெண்ணாத்தூர் அடுத்த மூஞ்சூர்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பிச்சாண்டி. இவர் கடந்த சில ஆண்டுகளாக ஆடு மேய்ச்சலில் ஈடுபட்டு வருகிறார். பிச்சாண்டி வழக்கம்போல் இன்றும் தனக்குச் சொந்தமான 22 ஆடுகளை வயல்வெளி பகுதிக்கு மேய்ச்சலுக்காக அழைத்துச் சென்றுள்ளார்.
பிற்பகலுக்குப் பிறகு மூஞ்சூர்பட்டு பகுதியில் திடீரென இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இந்நிலையில் எதிர்பாராவிதமாக வயல்வெளியில் மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த 22 ஆடுகள் இடி தாக்கி பரிதாபமாக உயிரிழந்தன.
உடனடியாக இதுகுறித்து அடுக்கம்பாறை வட்டாச்சியர், கால்நடை மருத்துவருக்கு தகவல் அளிக்கப்பட்டது. 22 ஆடுகளுக்கும் பிரேத பரிசோதனை மேற்கொண்ட பின்னர் ஆட்டின் உரிமையாளரிடம் ஆடுகளின் உடல்கள் ஒப்படைக்கப்பட்டன.
TAGGED:
sheep killed in thunderstorm