தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேலூரில் மூளைச்சாவு அடைந்த இளைஞர் - தானமாக பெறப்பட்ட இதயம் சென்னை கொண்டுசெல்லப்பட்டது! - வேலூரில் உயிரிழந்த இளைஞரின் இதயம் தானம்

வேலூரில் இருசக்கர வாகன விபத்தில் உயிரிழந்த இளைஞரின் இதயம் தானமாக பெறப்பட்டதையடுத்து, வேலூர் சிஎம்சி மருத்துவமனையிலிருந்தது சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு இன்று அவரது இதயம் சாலை மார்க்கமாக கொண்டு செல்லப்பட்டது.

வேலூரில் விபத்தில் உயிரிழந்த இளைஞரின் இதயம் தானம்
வேலூரில் விபத்தில் உயிரிழந்த இளைஞரின் இதயம் தானம்

By

Published : May 1, 2022, 8:23 PM IST

திருப்பத்தூர்:திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த 21 வயது இளைஞர் தினகரன். இவர் கடந்த 29ஆம் தேதி இருசக்கர வாகன விபத்தில் படுகாயமடைந்து வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இன்று (மே 1) மூளைச்சாவு அடைந்து உயிரிழந்தார்.

இந்நிலையில் அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்க குடும்பத்தினர் முன்வந்தனர். இதையடுத்து, இதயம், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் ஆகியவை தானமாக பெறப்பட்டன. இதயம் வேலூர் சிஎம்சி மருத்துவமனையிலிருந்தது சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு இன்று மாலை 3 மணி அளவில் சாலை மார்க்கமாக கொண்டு செல்லப்பட்டது. இரண்டு சிறுநீரகம் மற்றும் கல்லீரல் வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்குத் தானமாக வழங்கப்பட்டது.

வேலூரில் விபத்தில் உயிரிழந்த இளைஞரின் இதயம் தானம்

இதையும் படிங்க: திருவண்ணாமலையில் விசாரணை கைதி மரணம்: வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

ABOUT THE AUTHOR

...view details