வேலூர் மாவட்டம் பேர்ணாம்பேட்டை பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட நெகிழி பயன்படுத்தப்பட்டு வருவதாக ஆட்சியருக்கு புகார் வந்துள்ளது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் உத்தரவின் பேரில் நேற்று (அக்டோபர். 20) பேர்ணாம்பேட்டையில் உள்ள கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கிளெமென்ட், ராஜேஷ், பழனிசாமி ஆகியோர் சோதனை மேற்கொண்டனர்.
வேலூரில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்திய 5 கடைகளுக்கு அபராதம் விதிப்பு! - plastic items at vellore shops
வேலூர்: அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தி வந்த 5 கடைகளுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அபராதம் விதித்தனர்.
up
அப்போது, நெகிழி பயன்படுத்தி வந்த மளிகை கடைகள், ஓட்டல்கள் என மொத்தம் ஐந்து கடைகளிலிருந்து இருபது கிலோ அளவிலான நெகிழி பொருள்களை பறிமுதல் செய்தனர். மேலும், ஒவ்வொரு கடைக்கும் தலா 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.