வேலூர் மாவட்டம், வாணியம்பாடி நேதாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி ரஹீம். இவர் தனது குடும்பத்துடன் உறவினர் வீட்டில் நடைப்பெறும் நிகழ்ச்சிக்காக சென்றார். அப்போது திடீரென அவர் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. இதனையறிந்த அக்கம் பக்கத்தினர் ரஹீம் வீடு பற்றி எரிவது கண்டு அதிர்ச்சி அடைந்து, தீயணைப்புதுறையினருக்கு தகவல் அளித்தனர்.
வாணியம்பாடியில் தீ விபத்து; ரூ. 2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசம்! - fire accident
வேலூர்: வாணியம்பாடியில் குடிசை வீட்டில் மின்கசிவினால் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசமாகின.
2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்
நேதாஜி நகர் பகுதியில் செல்வதற்கு மிகவும் குறுகலாக சாலை இருப்பதாலும், அங்காங்கே மின்கம்பங்கள் உள்ளதாலும் தீயணைப்பு வாகனம் உள்ளே வருவதற்கு சிக்கல் ஏற்பட்டது. மேலும், தீயணைப்பு வாகனம் பழுதாகி நின்றதால் தீயை அணைக்க அப்பகுதி இளைஞர்கள் மிகவும் போராடினர். ஆனாலும் குடிசை முழுவதும் தீ பரவி வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் தீயில் கருகி சேதமடைந்தன. இது குறித்து வாணியம்பாடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.