வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கல்புதூர் மெட்டுக்குளம் பகுதியில் உள்ள தனியார் உணவகத்திலிருந்து (நாயுடு ரெஸ்டாரன்ட்) வாக்காளர்களுக்குப் பணம் விநியோகம் செய்வதற்காகச் சிலர் வாக்காளர்கள் குறித்த பட்டியல் தயாரித்துவருவதாகவும், பணம் கை மாறுவதாகவும் வந்த ரகசிய புகாரையடுத்து மாவட்டத் தேர்தல் அலுவலர் சண்முகசுந்தரம், காட்பாடி சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் அலுவலர் புண்ணியகோட்டி, காவல் கண்காணிப்பாளர், 30-க்கும் மேற்பட்ட காவலர்கள் இன்று (ஏப்ரல் 2) நள்ளிரவு 1 மணிமுதல் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று திடீர் சோதனை மேற்கொண்டனர்.
காட்பாடியில் திடீர் சோதனை: ரூ.18 லட்சம் பறிமுதல் - election news
வேலூர்: காட்பாடியில் உள்ள தனியார் உணவகத்தில் நள்ளிரவில் நடைபெற்ற திடீர் சோதனையில் 18 லட்சத்து 41 ஆயிரத்து 300 ரூபாய் பறிமுதல்செய்யப்பட்டது. அதனையடுத்து எட்டு நபர்களிடம் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
![காட்பாடியில் திடீர் சோதனை: ரூ.18 லட்சம் பறிமுதல் 18 லட்சத்து 41 ஆயிரத்து 300 ரொக்கம் பறிமுதல்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-11247197-448-11247197-1617334553617.jpg)
அதில் அங்கு சிலர் பூத் சிலிப்புகளையும், காட்பாடி தொகுதி அதிமுக வேட்பாளர் ராமு படம், அக்கட்சியின் வாக்குறுதிகள் பொறிக்கப்பட்டிருந்த தேர்தல் துண்டுப்பிரதிகளையும் வைத்திருப்பது தெரியவந்தது.
மேலும் அவர்கள் உறைகளில் பணத்தைப் பிரித்துப்போடும் பணியைச் செய்துகொண்டிருந்ததும் தெரியவந்தது. உடனடியாக மாவட்டத் தேர்தல் அலுவலரின் உத்தரவின்பேரில் அங்கிருந்த எட்டு பேரையும் கையும் களவுமாகப் பிடித்த காட்பாடி காவல் துறையினர், அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
மேலும் தனியார் உணவகத்திலிருந்து 18 லட்சத்து 41 ஆயிரத்து 300 ரூபாயும் - வாக்காளர் விவரங்கள் அடங்கிய பூத் சிலிப்புகள், அதிமுக வேட்பாளரின் படம், சின்னம் பொறிக்கப்பட்ட துண்டுப் பிரதிகள், சிலரின் பெயர் குறிப்பிடப்பட்ட பட்டியல்களும் பறிமுதல்செய்யப்பட்டன.
இந்தச் சோதனை நள்ளிரவு 1 மணி முதல் அதிகாலை 3.30 வரை நீடித்தது. அதைத்தொடர்ந்து காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் புண்ணியகோட்டி தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
இதையும் படிங்க:மீண்டும் சினிமாவில் ரீ- என்ட்ரி கொடுக்கும் நடிகர் வடிவேலு!