வேலூர் மாவட்டம் பொய்கை மோட்டூர் பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சன்முக சுந்தரத்துக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் வேலூர் மாவட்ட தாசில்தார் கோட்டீஸ்வரன் தலைமையிலான பறக்கும் படையினர், மாவட்ட வட்ட வழங்கல் அதிகாரி பானு ஆகியோர் அரிசி பதுக்க வைக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்ட இடத்துக்கு நேரில் சென்றனர்.
அப்போது, பொய்கை மோட்டூர் பகுதியிலுள்ள அம்மன் கோயில் தெருவில் உள்ள வீட்டிலும், மாரியம்மன் கோயிலின் பின்புறமும் சுமார் 15 டன் அளவிலான ரேஷன் அரிசி மூடைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.