தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெற்றோர் தொல்லையால் தற்கொலைக்கு முயன்ற சிறுமி: அரசு காப்பகத்தில் ஒப்படைப்பு! - சிறுமி தற்கொலைக்கு முயற்சி

வேலூர்: பெற்றோர் குடித்துவிட்டு தொல்லை தருவதால் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற 14 வயது சிறுமியை மீட்டு அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

பெற்றோர் தொல்லையால் தற்கொலைக்கு முயன்ற சிறுமி: அரசு காப்பகத்தில் ஒப்படைப்பு!
Small girl attempt suicide in vellore

By

Published : Aug 7, 2020, 5:04 AM IST

வேலூர் மாவட்டம் காட்பாடி ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்தவர்கள் மாரிமுத்து-கீதா தம்பதி. இவர்கள் பழைய பொருள்களை சேகரிக்கும் தொழில் செய்து வருகின்றனர். இவர்களுக்கு 4 பெண் பிள்ளைகள், 2 ஆண் பிள்ளைகள் என மொத்தம் 6 பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில் மாரிமுத்து-கீதா தம்பதி தினமும் குடித்துவிட்டு வந்து குழந்தைகளை தொல்லை செய்வதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த 14 வயது சிறுமி நேற்று (06.08.2020) காலை வீட்டை விட்டு வெளியேறி அருகில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதனைக் கண்ட அப்பகுதியினர் சிறுமியை மீட்டு காட்பாடி காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். பின்னர் வேலூர் மாவட்ட பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டு சிறுமி அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

மேலும் தனக்கு வீட்டிற்க்கு செல்ல விருப்பம் இல்லை என கூறியதால் மாவட்ட சமூக நலத்துறை சார்பில் அரசு காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளார். மீட்கப்பட்ட சிறுமி உட்பட 6 குழந்தைகளும் பள்ளிக்கு செல்லாமல் இருப்பதும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து மற்ற 5 குழந்தைகளையும் காப்பகத்தில் சேர்க்க சிறுமியின் தந்தை மாரிமுத்துவிடம் கேட்டபோது தனது மனைவியிடம் கலந்தாலோசித்த பிறகு குழந்தைகளை காப்பகத்தில் ஒப்படைப்பதாக தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details