தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேலூரில் ரூ.11 லட்சம் ரொக்கம் பறிமுதல் - வேலூர் ஆற்காடு

வேலூர்: வேலூரில் வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற வாகன சோதனையில் உரிய ஆவணங்களின்றி கொண்டுசெல்லப்பட்ட 11 லட்சத்து 13 ஆயிரத்து 228 ரூபாய் பறிமுதல்செய்யப்பட்டது.

வேலூரில் 11 லட்சம் ரொக்கம் பறிமுதல் !
வேலூரில் 11 லட்சம் ரொக்கம் பறிமுதல் !

By

Published : Apr 3, 2021, 2:16 PM IST

வேலூர் மாநகராட்சிக்குள்பட்ட மக்கான் பகுதியில் இன்று (ஏப்ரல் 3) தேர்தல் நிலை கண்காணிப்புக் குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் சென்ற அன்புராஜ் என்பவரை நிறுத்தி சோதனை செய்ததில் உரிய ஆவணமின்றி கொண்டுசெல்லப்பட்ட மூன்று லட்சத்து 29 ஆயிரத்து 715 ரூபாய் அவரிடமிருந்து பறிமுதல்செய்யப்பட்டது.

இதே போன்று இன்று (ஏப்ரல் 3) தேர்தல் பறக்கும் படையினர் வேலூர் ஆற்காடு சாலையில் உள்ள மாவட்ட நீதிமன்றம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் சென்ற பாஸ்கர் என்பவரை நிறுத்தி சோதனை செய்ததில் உரிய ஆவணமின்றி கொண்டுசெல்லப்பட்ட ஏழு லட்சத்து 83 ஆயிரத்து 513 ரூபாய் அவரிடமிருந்து பறிமுதல்செய்யப்பட்டது.

இரு வேறு இடங்களில் பறிமுதல்செய்யப்பட்ட 11 லட்சத்து 13 ஆயிரத்து 228 ரூபாய் வேலூர் கோட்டாட்சியர் கணேஷிடம் இன்று ஒப்படைக்கப்பட்டு மாவட்ட கருவூலத்தில் சேர்க்கப்பட்டது.

இதையும் படிங்க:நாளை மாலையுடன் ஓய்கிறது பரப்புரை

ABOUT THE AUTHOR

...view details