வேலூர்: 2021 தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத்தேர்தலையொட்டி வேலூரில் 100 விழுக்காடு வாக்குப்பதிவை வலியுறுத்தி இன்று (மார்ச்8) வேலூர் ஊரீசு கல்லூரி (Voorhees College) மற்றும் டிகேஎம் பெண்கள் கல்லூரியில் விழிப்புணர்வு கலை நிகழச்சிகள் நடைபெற்றன.
100 சதவீத வாக்குப்பதிவு: வேலூரில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு - 2021 Tamil Nadu Legislative Assembly General Election
வேலூரில் 100 விழுக்காடு வாக்குப்பதிவை வலியுறுத்தி கல்லூரி மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
100% Voting: Awareness for students in Vellore
வேலூர் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் துறை சார்பில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வேலூர் ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான சண்முக சுந்தரம் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். மேலும் கல்லூரி மாணவர்கள் 100 விழுக்காடு வாக்களிப்போம் என்று உறுதிமொழி ஏற்றனர்.