தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாணியம்பாடியில்10 அடி நீளமுள்ள 2 மலைப்பாம்புகள் பிடிபட்டன - 10 feet long python caught in Thiruppattur

திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே விவசாய நிலத்தில் 10 அடி நீளமுள்ள இரண்டு மலைப்பாம்புகளை பொதுமக்களின் உதவியுடன் தீயணைப்பு துறையினர் பிடித்தனர்.

வாணியம்பாடியில்10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடிபட்டது.! திருப்பத்தூர் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடிபட்டது.! 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடிபட்டது. 10 feet long python caught in Vaniyambadi. 10 feet long python caught in Thiruppattur python caught in Thiruppattur
python caught in Thiruppattur

By

Published : Jan 28, 2020, 5:45 PM IST

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகேயுள்ள உதயேந்திரம் குந்தானிமேடு பகுதியைச் சேர்ந்தவர் அசோகன். இவர் அதே பகுதியில் விவசாயம் செய்துவருகிறார். இந்நிலையில், தனது நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த கரும்பை கூலியாட்கள் மூலம் அறுவடை செய்து வந்தார். அப்போது, நிலத்தின் மையப்பகுதியில் 10 அடி நீளமுள்ள இரண்டு மலைப்பாம்புகள் ஊர்ந்து சென்றதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து உடனடியாக வனத்துறை, தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு பொதுமக்களுடன் சேர்ந்து இரண்டு மலைப்பாம்புகளையும் பிடித்து ஆலங்காயம் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதனைத் தொடர்ந்து, அந்த பாம்பை வனத்துறையினர் மாதகடப்பா காப்புக்காட்டில் பத்திரமாக விட்டனர்.

பிடிபட்ட மலைப்பாம்புகள்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details