தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நகைக் கடையில் ஒரு கிலோ வெள்ளி பொருள்கள் திருட்டு - vellore district news

வேலூர்: சத்துவாச்சாரி அருகேயுள்ள நகை கடையில் ஒரு கிலோ அளவிலான வெள்ளி பொருள்கள் திருடுபோன சம்பவம் குறித்து சிசிடிவி காட்சி அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வேலூர் நகை கடையில் 1 கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு
வேலூர் நகை கடையில் 1 கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு

By

Published : Oct 27, 2020, 2:22 PM IST

வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகே ஆம்பூர் ஜுவல்லர்ஸ் என்ற நகைக் கடை உள்ளது. இந்த கடையில் இன்று (அக். 27) அதிகாலை 3 மணி அளவில் கடையின் பூட்டை உடைத்து, ரூ. 60 ஆயிரம் மதிப்பிலான ஒரு கிலோ வெள்ளி பொருள்களை திருடிவிட்டு இருசக்கர வாகனத்தில் இருவர் தப்பிச்சென்றனர்.

இது குறித்து நகைக் கடை உரிமையாளர் மதன் குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சத்துவாச்சாரி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து சிசிடிவி காட்சி அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், திருட்டில் ஈடுபட்ட ஒருவரை அடையாளம் கண்டுள்ளதாக காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: விலையுயர்ந்த சைக்கிள்களை திருடிய பள்ளி மாணவன் - எச்சரித்த காவல்துறை!

ABOUT THE AUTHOR

...view details