திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பிரிவு சாலையில் மண்ணச்சநல்லூர் காவல் துறை, இளைஞர்கள் சங்கம் சார்பில் எமதர்மன் வேடமணிந்தும், ஓவியம் வரைந்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நையாண்டி மேளத்துடன் எமதர்மன் வேடமணிந்து பாசக் கயிறைக் கொண்டு அவ்வழியே தேவையின்றி சுற்றியவர்களின் கழுத்தில் போட்டு இழுத்துவந்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்களுக்குக் காவல் துறையினர் முகக்கவசம் அணிவித்து, வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என அறிவுரை வழங்கினர்.
பல்வேறு விழிப்புணர்வுப் பாடல்கள் மூலம் பொதுமக்களிடையே கரோனாவால் ஏற்படும் பாதிப்பைத் தவிர்ப்பதற்கு தனித்திரு, விழித்திரு என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.