திருச்சி மாவட்டம் மணப்பாறை எடத்தெரு பகுதியைச் சேர்ந்த வேளாங்கண்ணியின் மகன் சோபியாஸ் (17). இவர் தினக் கூலியாக வேலைப் பார்த்ததோடு, தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தி வந்தார். கடந்த சில மாதங்களாக அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்ததால் பெற்றோர் கண்டித்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த சோபியாஸ் நேற்றிரவு (ஆகஸ்ட் 10) வீட்டைவிட்டு வெளியேறுவதாக கூறிச் சென்றார். இதையடுத்து, இன்று (ஆகஸ்ட் 11) காலை காரைமேட்டுப்பட்டி பகுதியில் உள்ள முன்னாள் எம்.எல்.ஏ தோட்டத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சோபியாஸை கண்ட அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.