திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள ரெங்கா நகரை சேர்ந்தவர் நிகில் (22). இவருக்கும் காந்தி நகர் பகுதியை சேர்ந்த அரவிந்த் என்பவருக்கும் முன் விரோதம் இருந்துள்ளது. குறிப்பாக 6 மாதங்களுக்கு முன்பு மதுபோதையில் வந்த அரவிந்த் நிகிலின் பைக்கை அபகரித்துகொண்டு சென்றதாகவும், அதன்பின் நிகில் அரவிந்திடம் தகராறு செய்து பைக்கை மீட்டு கொண்டு வந்தாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று (நவ. 3) மண்ணச்சநல்லூர் அருகே ராசாம்பாளையத்தில் உள்ள நண்பர் வீட்டில் பேசிக்கொண்டிருந்த நிகிலை அங்கு வந்த அரவிந்த் கூர்மையான கத்தியால் சரமாரியாக தாக்கியுள்ளார். அதைத்தொடர்ந்து நிகில் அங்கிருந்து தப்பி ஓடி ஆரம்பித்தார். இருப்பினும் நிகிலை அரவிந்த் விடாமல் ஓட ஓட விரட்டிக்சென்று கொலை செய்ய முயன்றுள்ளார். இதனால் அவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டன.