திருச்சி:திருச்சி நகர்ப் பகுதிகளில் போதை ஏற்படுத்தும் எல்.எஸ்.டி என்ற லைசெர்கிஸ் ஆசிட் டைத்லாமைட்(LSD), மெத்தாம்பிடாமைன் போன்ற மாத்திரைகள் விற்கப்படுவதாக மாநகர காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இது தொடர்பாகத் திருச்சி சிந்தாமணி பகுதியில் நேற்று ஹரிஹரன்(23) என்ற வாலிபரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
திருச்சியில் புதிய வடிவில் போதை மாத்திரை விற்பனை.. ஹரிஹரன் அகப்பட்டது எப்படி? - latest tamil news
திருச்சியில் புதிய வடிவில் போதை மாத்திரை விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சியில் போதை மாத்திரை விற்ற வாலிபர் கைது
விசாரணையில் அவர் போதை ஏற்படுத்தும் எல்.எஸ்.டி மற்றும் மெத்தாம்பிடாமைன் மாத்திரைகளை, வெளியூர்களிலிருந்து கொரியரில் வரவழைத்து பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு சாக்லேட் வடிவில் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் கோட்டை காவல்துறையினர் ஹரிஹரனைக் கைது செய்து, அவரிடம் இருந்து போதை மாத்திரைகளைப் பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க:செயின் மற்றும் செல்போன் பறிப்பு குற்றச்செயல்களில் ஈடுபட்ட 7 பேர் கைது!