திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் பத்தாம் வகுப்பு பள்ளி படிப்பை முடித்துவிட்டு, திருப்பூரில் உள்ள தனியார் பஞ்சாலையில் வேலை செய்து வருகிறார்.
அதே ஆலையில் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியம் மகன் லெனின் (24) என்பவரும் ஓட்டுநராக வேலை செய்துவருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன் சிறுமியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி இளைஞர் அழைத்து சென்றுள்ளார்.
உடனே சிறுமியின் பெற்றோர் வையம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சிறுமி, லெனின் ஆகியோரை தேடி வந்தனர்.