திருச்சி: மணப்பாறை அடுத்த சீத்தப்பட்டியைச் சேர்ந்த அகஸ்டின் ராபர்ட் (22) கானப்பாடி புதூரைச் சேர்ந்த திவ்ய ஜெரினாவை (21) நான்கு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.
இவர்களுக்கு அதிபன் ஜோயல் என்ற மகனும், ஜயோக்கிய ஆதிரா என்ற மகளும் உள்ளனர். கணவன் அவ்வப்போது வேலைக்குச் செல்லாமல் இருந்ததால் கடந்த ஆறு மாதங்களாக இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று (டிசம்பர் 14) கணவர் வெளியில் சென்றிருந்த நிலையில் வீட்டிலிருந்த திவ்ய ஜெரினா தற்கொலையில் உயிரிழந்தார். இதனையடுத்து அகஸ்டின் ராபர்ட் வீடு திரும்பியபோது, மனைவி உயிரிழந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.