திருச்சி: மணப்பாறை அத்திகுளம் (எ) கீரைத்தோட்டம் பகுதியை சேர்ந்த சுப்ரமணியன் என்பவரின் 16 வயது மகள் திண்டுக்கல் ரோட்டில் உள்ள அரசு உதவிபெறும் பெண்கள் மேல்நிலை பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் இன்று (மே 31) மாலை பள்ளியில் தேர்வு முடிந்து வீடு நோக்கி நடந்து சென்ற மாணவியை திருச்சி ரயில்ரோடு மேம்பாலத்தின் அருகே வாலிபர் ஒருவர் மாணவியின் கழுத்து உட்பட பல இடங்களில் கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடியுள்ளார்.
இதில் ரத்த வெள்ளத்தில் ஆபத்தான நிலையில் மயங்கி விழுந்த பள்ளி மாணவியை உடனடியாக அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிக்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், அங்கு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில்,