திருச்சி மாவட்டம் வளநாடு அருகேவுள்ள வேம்பனூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் பாக்கியலட்சுமி (19).
கல்லூரி மாணவியான இவர் டிச. 29ஆம் தேதி வீட்டின் அருகிலுள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
மேலும், தன் சாவுக்கு காரணம் எனக் கூறி ஒரு குறிப்பிட்ட நபரின் செல்ஃபோன் எண்ணை கடிதத்தில் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த வளநாடு காவல் துறையினர், விசாரணை நடத்தினர். முதற்கட்டமாக கடிதத்தில் இருந்த செல்ஃபோன் எண்ணின் உரிமையாளரான திருநெல்வேலி மாவட்டம் துலுக்கர்பட்டியைச் சேர்ந்த வேலுச்சாமி மகன் ராமராஜ் என்பவர் தெரியவந்தது.