திருச்சி:ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸில் வரும் ஜூலை 24ஆம் தேதி முதல் பக்தர்கள் தங்க அனுமதிக்கப்படுகிறது. இதற்கான முன்பதிவு இன்று (ஜூலை 13) முதல் தொடங்குகிறது. இது குறித்து அறநிலையத் துறை ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் இணை ஆணையர் மாரிமுத்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்குவதற்கு ஸ்ரீரங்கம் பஞ்சக்கரை சாலையில் யாத்திரி நிவாஸ் தங்கும் விடுதி ஒரே நாளில் சுமார் ஆயிரம் நபர்கள் தங்கும் வகையில் உள்ளது.
கரோனா தொற்று பரவல் காரணமாக சுமார் 72 நாள்கள் வழிபாட்டுத்தலங்களில் பக்தர்கள் அனுமதியின்றி, பூஜைகள் மட்டும் நடைபெற்று வந்தன. கடந்த மே , ஜுன் மாதங்களில் கரோனா தொற்று அதிகம் இருந்த நேரத்தில் கரோனா சிகிச்சை மையமாக செயல்படுத்த திருச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் யாத்திரி நிவாஸ் வளாகம் எடுத்துக் கொள்ளப்பட்டது.
யாத்திரி நிவாஸ் வளாகம்: