திருச்சியில் கரோனா கால நெருக்கடி நேரத்தில் கடன் வசூலில் அத்துமீறும் நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அனைத்திந்திய மாதர் சங்கம் சார்பில் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தில் கரோனா ஊரடங்கு காரணமாக ஏழை, எளிய மக்கள் வருமானமின்றி தவித்துவருகின்றனர். எனவே நுண் நிதி நிறுவனங்கள், வங்கிகளில் சுய உதவிக் குழுக்கள் பெற்றுள்ள கடன் தவணை தொகையை செலுத்த 6 மாத காலம் (மார்ச்-2021 வரை) அவகாசம் வழங்க வேண்டியும், மார்ச் வரை கூடுதல் அபராத வட்டிகளை தள்ளுபடி செய்யவும் கோரிக்கைகள் எழுப்பட்டன.
மேலும் கடன் வசூலிக்கும் முகவர்கள் அடாவடியாகச் செயல்படுவதைத் தடுத்து நிறுத்தி, அத்துமீறி செயல்படுவோர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவும், மகளிர் மேம்பாட்டிற்காக அரசே வங்கிகள் மற்றும் கூட்டுறவு துறைகள் மூலம் மானியத்துடனான கடன் வழங்க வேண்டும் எனப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைவிடுத்தனர்.
திருச்சியில் மாதர் சங்கம் போராட்டம் அனைத்திந்திய மாதர் சங்கம் சார்பில் முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி தலைமையில் திருச்சி ஆட்சியர் அலுவலகம் முன்பாக இந்தக் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர் மல்லிகா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க... கரோனா முன்னெச்செரிக்கை நடவடிக்கை - பயமின்றி நடக்கும் விமான பயணம்