தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 11, 2023, 10:23 AM IST

ETV Bharat / state

இரட்டை இலை சின்னத்தை கேட்டு பெற்று கர்நாடக தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவோம் - ஓபிஎஸ்

அதிமுக ஓபிஎஸ் அணி சார்பில் ஏப்ரல் 24 ஆம் தேதி நடைபெற உள்ள முப்பெறும் விழா குறித்த ஆலோசனை கூட்டத்தி; பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், கர்நாடக மாநில தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவோம் எனவும், இரட்டை இலை சின்னத்தை நாங்கள் கேட்டு பெறுவோம் எனவும் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

இரட்டை இலை சின்னத்தை கேட்டு பெற்று கர்நாடக தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவோம் - ஓபிஎஸ்

திருச்சி: அதிமுக ஓபிஎஸ் அணியின் சார்பில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா, ஜெயலலிதா பிறந்தநாள் விழா மற்றும் அதிமுக 51வது ஆண்டு விழா என முப்பெரும் விழா மாநாடு ஏப்ரல் 24ஆம் தேதி நடைபெற உள்ளது. அந்த மாநாடு குறித்தான ஆலோசனை கூட்டம் திருச்சியில் நேற்று நடைபெற்றது. இதில் ஓபிஎஸ் அணியின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமை கழக நிர்வாகிகள் குறிப்பாக வைத்தியலிங்கம், ஜே.சி.டி.பிரபாகரன், கு.ப.கிருஷ்ணன், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பேசிய, ஓ.பன்னீர்செல்வம், “ஜெயலலிதா அதிமுகவை வழி நடத்திய பாதையில் நாம் இயக்கத்தில் பயணித்து வருகிறோம். அதிமுகவை தொண்டர்களுக்கான இயக்கமாக எம்ஜிஆர் உருவாக்கினார். அந்த இயக்கத்தின் தொண்டர்கள் தான் யார் இயக்கத்தின் தலைமை பொறுப்புக்கு வர வேண்டும் என தேந்தெடுக்கிற உரிமையை வழங்கியவர் எம்ஜிஆர், அதை அச்சு பிசறாமல் பின்பற்றியவர் ஜெயலலிதா.

அதிமுக-விற்கு வந்த அனைத்து சோதனைகளையும் தாங்கி ஜெயலலிதா கட்சியை ராணுவ கட்டுப்பாட்டோடு வழி நடத்தினார். அதிமுக-வின் காவல் தெய்வமாக இருந்தார். அதிமுகவில் அமைப்பு ரீதியான தேர்தலை தொண்டர்களுக்கான உரிமையை அளித்து எம்ஜிஆர், ஜெயலலிதா நடத்தினார்கள். ஆனால் இன்று சர்வாதிகாரத்தின் உச்ச நிலைக்கு சென்று எம்ஜிஆர் கொண்டு வந்த சட்ட விதிகளை மதிக்காமல் புதிதாக சட்டத்தை உருவாக்கி தேர்தலை நடத்தி உள்ளார்கள்.

எம்ஜிஆரை, திமுகவில் இருந்து நீக்கிய பிறகு அவருக்கு இருந்த எண்ணத்தின் அடிப்படையில் தொண்டர்கள் தான் தலைமையை தேர்ந்தெடுக்க வேண்டும் என சட்ட விதியை உருவாக்கினார். ஜெயலலிதா அதனை பின்பற்றியதால் தான் அவருக்கான உச்சபட்ச மரியாதையாக அவரை நிரந்தர பொதுச்செயலாளராக தொண்டர்கள் அறிவித்தார்கள். அந்த மரியாதையை ரத்து செய்துள்ளது இந்த சதிகார கூட்டம்.

நான் மட்டும் பெரியாரின் பேரன் அல்ல அதிமுகவில் இருக்கும் ஒன்னறை கோடி பேரும் பெரியாரின் பேரன் தான். நாம் மீண்டும் தொடங்கிய தர்ம யுத்தம் எந்த வித பிசுறும் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. தமிழக மக்களும் நமக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்கள். இறுதியில் நாம் தான் வெற்றி அடைய போகிறோம்.

நம்முடைய சக்தியை நிரூபிக்கும் வகையில் ஏப்ரல் 24-ஆம் தேதி நடைபெறும் மாநாடு இருக்கும். இந்த கூட்டம் அதற்கு முன்னுரை கூட்டமாக அமைந்துள்ளது. இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் நம் பலத்தை காட்டுவோம். நம் எண்ணம்-செயல் எதுவாக இருந்தாலும் எம்ஜிஆர், ஜெயலலிதா காட்டிய வழியில் நாம் செல்வதற்கு மாநாடு அடித்தளமாக இருக்கும்” என்றார்

கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், “ஏப்ரல் 24-ஆம் தேதி நடைபெறும் மாநாடு சர்வாதிகார கும்பல், கழகத்தின் சட்ட விதியை அபகரித்தை நீக்கும் மாநாடாக அமையும். எம்ஜிஆர் தொண்டர்களுக்கு தந்த உரிமை மீட்டெடுக்கப்படும். உறுதியாக சட்டப் போராட்டத்திலும் நாங்கள் வெல்வோம்.

எம்ஜிஆர் காலம் முதல் ஜெயலலிதா காலம் வரை அதிமுகவில் பணியாற்றிய அனைவரையும் ஒன்றிணைத்து ஒருங்கிணைத்து இந்த இயக்கத்தை மீண்டும் நடத்துவோம். சசிகலா, தினகரன் உள்ளிட்ட அனைவரையும் அழைப்போம். எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் அனைவரையும் ஒருங்கிணைத்து எப்படி இந்த இயக்கத்தை நடத்தினார்களோ அதுபோலவே நாங்களும் நடத்துவோம். சசிகலாவையும் தினகரனையும் நேரில் சென்று அழைப்பீர்களா என்கிற கேள்விக்கு பொறுமையாக இருந்து பாருங்கள் நல்லதே நடக்கும் என்றார்.

மாநாட்டிற்குப் பின்பு ஓபிஎஸ் அணியினரின் தலைமை பொறுப்புகளில் மாற்றம் வருமா? என்கிற கேள்விக்கு, யூகமான கேள்வியாக உள்ளது என பதில் அளித்தார். ஒன்றரை கோடி தொண்டர்களின் குரலாகவே நாங்கள் ஒலிக்கிறோம். தொண்டர்கள் நினைத்தால் மீண்டும் இந்த இயக்கத்தில் அனைவரையும் ஒன்றிணைக்க முடியும். அவர்கள் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் நடக்கும்.

கர்நாடக தேர்தலில் உறுதியாக போட்டியிடுவோம் இரட்டை இலையை நாங்கள் கேட்டு பெறுவோம். பாஜக தேசிய கட்சியாக இருக்கிறது அவர்கள் எண்ணத்தின் படி அவர்கள் செயல்படுகிறார்கள், நாங்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா காட்டிய வழியில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்” என கூறினார்.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களை உடனடியாக பிரிக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறும் காரணங்கள்?

ABOUT THE AUTHOR

...view details