தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருச்சி மேயர் யாரு?

திருச்சி மேயர் பதவி ஆண்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், அதனை யார் அலங்கரிக்கப்போகிறார்கள் என விவாதம் தொடங்கிவிட்டது.

திருச்சி மேயர் யாரு
திருச்சி மேயர் யாரு

By

Published : Feb 23, 2022, 3:25 PM IST

Updated : Feb 23, 2022, 4:11 PM IST

திருச்சி: கடந்த 25 ஆண்டுகளாக பெண்களே அலங்கரித்து வந்த மேயர் பதவி தற்பொழுது ஆண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. திருச்சியில் திமுக மாபெரும் வெற்றியை ருசித்து இருப்பதாலும் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி கோஷ்டி என இரண்டு பிரிவாக பிரிந்து இருப்பதாலும் மேயர் சீட்டை யார் அலங்கரிக்கப்போகிறார்கள் என விவாதம் தொடங்கிவிட்டது.

விவாதம்

ஒரு தரப்பினர் அமைச்சர் கே.என்.நேருவின் ஆதரவாளரான அன்பழகன்தான் மேயர் என அடித்துச்சொல்கிறார்கள். மற்றொரு தரப்பினர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆதரவாளரான மதிவாணன்தான் மேயர் என மனக்கோட்டை கட்டிக்கொண்டு இருக்கிறார்கள்..

திருச்சி மாநகராட்சியில் அதிக வாக்குகள் பெற்று வெற்றிக்கனியை ருசித்த முத்துச்செல்வம் கோட்டத்தலைவராக நியமிக்கப்படலாம் என்கிற பேச்சு நிலவுகிறது. அதேபோல இரண்டாம் இடம் பிடித்த அன்பழகன் தான் மேயர் எனவும் இது 25 ஆண்டுகள் கனவு என்கிறார்கள் அவரது தரப்பினர்.

பெண்கள் வெற்றி

இந்நிலையில் பாதிக்கு பாதி பெண்கள் வெற்றி பெற்றுள்ளதால் துணை மேயர் ஒரு பெண்ணுக்குத்தான் என சிலர் இப்பொழுதே பட்டிமன்றம் நடத்த தொடங்கிவிட்டார்கள். இதில் கூட்டணிக் கட்சிகளான மதிமுகவின் கதீஜா, காங்கிரஸ் சுஜாதா ஆகியோர் பெயர்கள் அடிபடுகின்றன என்றாலும் திமுக கட்சியிலேயே இருக்கும் விஜயா ஜெயராஜை துணை மேயர் ஆக்கலாம் என்ற குரல்களும் ஓங்கி ஒலிக்கின்றன.

இதையும் படிங்க:காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டு இருந்தால்; பாஜக விட பத்து மடங்கு வெற்றி பெற்று இருக்கும் - கே.எஸ். அழகிரி

Last Updated : Feb 23, 2022, 4:11 PM IST

ABOUT THE AUTHOR

...view details