நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், திருச்சி மாவட்டம் துறையூர் அருகே பச்சமலை வனத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மலைகள் நிறைந்த பகுதியாகும். இங்கு காட்டுப்பன்றி, காட்டெருமை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிக அளவில் உள்ளன.
இந்நிலையில் பச்சமலை பூதக்கால் பகுதியில் வனவிலங்குகளை சமூகவிரோத கும்பல் வேட்டையாடுவதாக வனத் துறைக்குப் புகார் வந்துள்ளது. அவர்களைப் பிடிப்பதற்காக வனத் துறையினர் நேற்று நள்ளிரவில் ரோந்து சென்றுள்ளனர்.
அப்போது பச்சமலை பூதக்கால் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது கள்ளத்துப்பாக்கியால் வனவிலங்குகளை வேட்டையாடிக் கொண்டிருந்த நபரைப் பிடிக்க வனத் துறையினர் முயற்சிசெய்தனர்.
அப்போது வேட்டையில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர் துப்பாக்கியை கீழே போட்டுவிட்டு தப்பியோடிவிட்டார். வனத் துறையினர் அந்தத் துப்பாக்கியைக் கைப்பற்றி சோதனை செய்தபோது அது நாட்டுத்துப்பாக்கி என்பது தெரியவந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக அந்த நாட்டுத் துப்பாக்கி திடீரென வெடித்தது.