தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருச்சியில் நாளை மறுநாள் குடிநீர் விநியோகம் நிறுத்தம் - trichy

திருச்சியில் நவம்பர் 13ஆம் தேதி பல்வேறு இடங்களில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

குடிநீர் விநியோகம் நிறுத்தம்
குடிநீர் விநியோகம் நிறுத்தம்

By

Published : Nov 11, 2022, 10:30 AM IST

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பராமரிப்பின் கீழ் இயங்கி வரும் பொது தரை மட்ட கிணறு நீர் உந்து நிலையத்திலிருந்து உந்தப்படும் பிரதான குழாயில் சங்கிலியாண்டபுரம், பிச்சை நகர், அருகில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் மராமத்து செய்யும் பணி 12.11.2022 அன்று மேற்கொள்ளப்பட உள்ளது.

இதனால் தேவதானம், விறகுபேட்டை புதியது, கல்லுக்குழி புதியது, கல்லுக்குழி பழையது, ஜெகநாதப்புரம் புதியது, ஜெகநாதப்புரம் பழையது, அரியமங்கலம் உக்கடை, தெற்கு உக்கடை, சங்கிலியாண்டபுரம் புதியது, சங்கிலியாண்டபுரம் பழையது மற்றும் மகாலட்சுமி நகர் ஆகிய 10 மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டிகள் மூலம் வழங்கப்படும் பகுதிகளுக்கு 13.11.2022 குடிநீர் விநியோகம் இருக்காது.

14.11.2022 அன்று வழக்கம் போல் குடிநீர் விநியோகம் நடைபெறும். இதனால் பொதுமக்கள் குடிநீரை சேமித்து சிக்கனமாக பயன்படுத்தி கொள்ள திருச்சி மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படிங்க:வடகிழக்கு பருவமழை ... பீதி அடையும் அடையாற்று மக்கள்...

ABOUT THE AUTHOR

...view details