தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குத்துச்சண்டை: பதக்கங்களை வாங்கி குவித்த திருச்சி பாய்ஸ்! - got medals in chennai boxing match

சென்னையில் நடந்த குத்துச்சண்டைப் போட்டியில் பதக்கங்களைக் குவித்த வீரர்களுக்கு, திருச்சியில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.

குத்துச்சண்டை
குத்துச்சண்டை

By

Published : Aug 17, 2021, 10:42 PM IST

சென்னையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு, நுங்கம்பாக்கத்தில் மாவட்ட அளவிலான குத்துச்சண்டைப் போட்டி கடந்த ஆகஸ்ட் 13, 14, 15ஆம் தேதிகளில் நடைபெற்றது.

இப்போட்டியில் கலந்து கொள்ள திருச்சி மாவட்ட குத்துச்சண்டை கழகத்தின் சார்பில் குத்துச்சண்டை பயிற்சியாளர் செல்வகுமார் தலைமையில் 14 பேர் கொண்ட குழுவினர் ரயில் மூலம் சென்னை சென்றனர். அங்கு பல்வேறு பிரிவுகளில் குத்துச்சண்டை போட்டிகள் நடைபெற்றன.

இதில் சீனியர் பிரிவில் மோகனபிரசாத் தங்கப் பதக்கமும், ராஜகணபதி, மணிகண்டன், முகேஷ், பாலாஜி ஆகியோர் வெண்கலப் பதக்கமும் வென்று அசத்தினார்கள்.

குத்துச்சண்டை

அதேபோல், இளையோர் பிரிவில் அவ்ரித் மற்றும் ஜூனியர் பிரிவில் ஜெயகாந்த், கோகுல் ஆகிய மூவரும் வெண்கலப் பதக்கம் வென்றனர்.

சப் ஜூனியர் பிரிவில் ஆகேஷ் வெள்ளிப்பதக்கமும், அஜய் வெண்கலப் பதக்கமும் வென்று திருச்சி மாவட்டத்திற்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

இந்நிலையில் இன்று, திருச்சி வந்திறங்கிய விளையாட்டு வீரர்களுக்கு ரயில் நிலையத்தில் மாற்றம் அமைப்பு, சமூக ஆர்வலர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதையும் படிங்க:மாரியப்பன் மீண்டும் தங்கம் வெல்வார் - தாயார் சரோஜா நம்பிக்கை

ABOUT THE AUTHOR

...view details