உலகை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸால், தமிழ்நாட்டில் இதுவரை 1.5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கரோனா தடுப்பு நடவடிக்கையை முடுக்கிவிட மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக திருச்சி மாநகராட்சி பகுதிகளில் வார்டு வாரியாக பரிசோதனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. திருச்சி மாநகராட்சி பகுதியில் உள்ள 65 வார்டுகளிலும் கரோனா வைரஸ் நோய் தடுப்புப் பணி முன்னெச்சரிக்கையாக பள்ளிகளில் பரிசோதனை முகாம் நடைபெறுகிறது.
இந்த பரிசோதனை முகாமை மாநகராட்சி அலுவலர்கள், சுகாதாரத்துறை அலுவலர்கள் ஆகியோர் இணைந்து இன்று (ஜூலை 16) முதல் தொடங்கவுள்ளனர். திருச்சி மாநகராட்சியில் மொத்தமுள்ள நான்கு மண்டலங்களிலும் வார்டு வாரியாக இந்த முகாம் நடைபெறுகிறது.