தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடும்பத்துடன் கூலித் தொழிலாளி தீக்குளிக்க முயற்சி

திருச்சி : மணப்பாறை அருகே பாதை ஆக்கிரமிப்பை அகற்றி தரக் கோரி கூலித் தொழிலாளி ஒருவர் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Attempt to fire mercenary worker with family
Attempt to fire mercenary worker with family

By

Published : Jul 3, 2020, 2:27 PM IST

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த மொண்டிப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட நரியம்பட்டியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவர் கட்டடத் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார்.

இவரது வீட்டிற்கு செல்லும் பாதையின் அருகேயுள்ள பொது இடத்தில் அதே ஊரைச் சேர்ந்த கோபால் என்பவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வீடு கட்டுவதற்காக செங்கற்கள் வாங்கி இறக்கி வைத்திருந்த நிலையில், தற்போது அந்தப் பாதையின் குறுக்கே மீண்டும் அரளைக் கற்களை நிரப்பி ஆக்கிரமிப்பு செய்ய முயன்றுள்ளார்.

இதனையடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றி தனக்கு பாதை வசதி செய்து தரக்கோரி மாரியப்பன் உள்ளிட்ட ஊர் பொது மக்கள் இணைந்து கடந்த 15ஆம் தேதி மணப்பாறை வட்டாட்சியரிடம் மனு அளித்திருந்தனர்.

இந்நிலையில், 15 நாட்களுக்கு மேலாகியும் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்காததால் மனமுடைந்த மாரியப்பன், தனது குடும்பத்தினருடன் வீட்டில் இருந்த பொருட்களை வீதியில் போட்டு போராட்டத்தில் ஈடுபட்டார்.

வீட்டில் இருந்த பொருட்களை வெளியே கிடத்தி போராட்டத்தில் ஈடுபட்ட மாரியப்பன் குடும்பத்தார்

இதனையடுத்து பொது மக்கள் அளித்த தகவலின்பேரில் வருவாய் ஆய்வாளரும் கிராம நிர்வாக அலுவலரும் சம்பவ இடத்திற்கு வந்த நிலையில், அவர்கள் முன் மாரியப்பன் தனது இரு குழந்தைகளுடன் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளனர்.

பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த மணப்பாறை காவல் துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து மாரியப்பனும் அவரது குடும்பத்தினரும் போராட்டத்தைக் கைவிட்டனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details