தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாலையின் நடுவே முதியவரைத் தாக்கும் காவலர்: வைரல் காணொலி - முதியவரை தாக்கிய காவலர் வீடியோ

திருச்சி: கன்டோன்மென்ட் பகுதி சாலையில் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த முதியவரை நிறுத்தி காவலர் ஒருவர் தாக்கும் காணொலி வைரலாகிவருகிறது.

police-attacking-old-man
police-attacking-old-man

By

Published : Jun 30, 2020, 7:00 AM IST

திருச்சி கன்டோன்மென்ட் பகுதியில் சாலையில் சைக்கிளில் சென்ற முதியவர் ஒருவரை காவலர் ஒருவர் தாக்கும் காணொலி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதியவரை தாக்கும் காவலர்

அந்தக் காணொலியில், கன்டோன்மென்ட் ஐயப்பன் கோயில் ரவுண்டானாவில் முதியவர் ஒருவர் சைக்கிளில் சென்றுகொண்டிருக்கிறார். அந்தச் சைக்கிளின் மீது காவலர் ஓட்டிவந்த இருசக்கர வாகனம் மோதுகிறது.

இது குறித்து முதியவர் காவலரிடம் முறையிடுகிறார். அதற்குக் காவலர் முதியவரை சாலையின் நடுவே வைத்து கன்னத்தில் அறைவது பதிவாகியுள்ளது. தற்போது அந்தக் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க:வி.ஹெச்.பி. பிரமுகர் பட்டப்பகலில் படுகொலை! ஆன்லைனில் உலாவும் வைரல் வீடியோ

ABOUT THE AUTHOR

...view details